search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புது மாப்பிள்ளை"

    குளச்சல் அருகே புது மாப்பிள்ளை திடீரென உயிரிழந்த சம்பவத்தையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குளச்சல்:

    நாகர்கோவில் மூவேந்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 34). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்தார்.

    இவரது மனைவி உஷா (29). இவர்களுக்கு திருமணம் முடிந்து 12 நாட்கள் ஆகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று மணி மற்றும் அவரது மனைவி உஷா ஆகியோர் பாலப்பள்ளத்தில் உள்ள உஷாவின் தாயார் வீட்டிற்கு சென்று இருந்தனர்.

    அங்கு இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது மணிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அவரை உறவினர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்...

    குளச்சல் பள்ளிவிளாகம் பகுதியை சேர்ந்தவர் தினகரன் (51). பெயிண்டிங் வேலை செய்து வந்தார்.

    இவரது மனைவி சுதா (40). இவர் குளச்சல் நகராட்சி அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தினகரனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட் டது. இதையடுத்து அவர் சிகிச்சை பெற்று வந்தார். நோய் குணமாகாத வருத்தத்தில் அவர் அதிகளவு மாத்திரையை தின்று மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக தினகரன் இறந்தார்.

    இதுகுறித்து குளச்சல் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தக்கலை பேலஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் சதாசிவம் (70). இவர் வக்கீலாக இருந்தார்.

    இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று அவரது மனைவி மற்றும் மகன் நாகர்கோவிலுக்கு வந்திருந்தனர். பின்னர் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு சதாசிவம் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதைப் பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தார். மேலும் சம்பவம் குறித்து தக்கலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரம்மகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பிணமாக கிடந்த சதாசிவத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போடியில் 15 வயது சிறுமியை திருமணம் செய்த புதுமாப்பிள்ளை மற்றும் சிறுமியின் தாயாரை போலீசார் கைது செய்தனர்.
    மேலசொக்கநாதபுரம்:

    போடி அருகே குரங்கணி பகுதியை சேர்ந்தவர் முத்துமீனா. இவரது 15 வயது மகளை அதே பகுதியை சேர்ந்த சதீஷ் (27) என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார். சதீஷ் ஆந்திராவில் உள்ள முருக்கு கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    மகளை திருமணம் செய்து வைத்தால் தனக்கு ஆதரவாக இருப்பார்கள் என முத்துமீனா நினைத்தார். ஆனால் திருமணம் முடிந்ததும் சதீஷ் மற்றும் அவரது மனைவி ஆந்திராவிற்கு சென்று விட்டனர்.

    கணவன் இறந்து விட்டதால் தனியாக இருந்த முத்துமீனா அவர்களை தன்னுடன் வசிக்குமாறு கூறி உள்ளார். அதற்கு அவர்கள் மறுக்கவே போலீசில் தனது மகளை கடத்தி விட்டதாக புகார் அளித்தார்.

    இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் 3 மாதத்திற்கு முன்பு முத்துமீனாவே தனது மகளை சதீசுக்கு திருமணம் செய்து வைத்ததும் தற்போது அந்த சிறுமி 2 மாத கர்ப்பிணியாக இருந்ததும் தெரிய வந்தது.

    இது குறித்து மாவட்ட சைல்டு லைன் அமைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அளித்த புகாரின் பேரில் முத்துமீனா மற்றும் சதீஷ் கைதுசெய்யப்பட்டனர்.

    தாய் மற்றும் கணவர் சிறைக்கு சென்றதால் 15 வயது சிறுமி என்ன செய்வது என தெரியாமல் அழுது கொண்டிருந்தது அங்கிருந்தவர்களை கண் கலங்கச் செய்தது.

    ×